🔴ஊடக சந்திப்பு – Lover’s Day Mega Night Live Concert – Jaffna

425

“HM BROTHERS CAR SALES” பெருமையுடன் வழங்கும் இசை திருவிழா மற்றும் கலை நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 14ம் திகதி மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் TILKO HOTEL ல் ஆரம்பிக்விருக்கின்றது.

இந்த நிகழ்வு தொடர்பில் HM BROTHERS CAR SALES நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கஜன் மற்றும் நிகழ்வு ஒருங்கமைப்பாளர் மிருணன் ஆகியோர் இன்று (09) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தென்னிந்திய நட்சத்திர நடிகர்களான வில்லன் நடிகர் சாய்தீனா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ரோபோ சங்கர் மற்றும் விஜய் டிவியின் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் ஊடாக அனைவர் மனதிலும் இடம் பிடித்த பிரியங்கா சங்கர், தளபதி விஜயின் பிகில் திரைப்படம் ஊடாக பாண்டியம்மாவாக அவதரித்த இந்திரஜா சங்கர் ஆகியோரும், நடிகையும் விஜய் டிவி பிரபலமுமான ஸ்ருதிகா அர்ஜூனும் சிறப்பு விருந்தினர்களாகவும் கலை நிகழ்வுகளின் அன்பாளர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இவர்கள் மட்டும் இல்லாமல் இசை விருந்திற்காக பின்னனி பாடகர்களான பூவையார், அஜய் கிருஷ்ணா, ஶ்ரீ நிஷா உட்பட பலரும் வருகை தந்து எமது பெருமைக்குரிய இளம்தலைமுறையின் தாயக கலைஞர்களான RAP CEYLON குழு, வாகீசன் இராசையா, திசோன், ஆத்விக் மற்றும் இன்னும் பல ஈழத்து பாடகர்களான ரமணன், வாசினி, பானு, தீபன், கில்மிஷா, ரகு பிரணவன், வீனா, போன்றோருடன் இணைந்து SN MUSIC BAND ஶ்ரீ நிர்மலன் உடன் சங்கமிக்கும் மாபெரும் இசை இரவாக கொண்டாடவிருக்கின்றனர்.

இந்த இசைவிழாவின் நிகழ்வில் கலந்து கொள்ளும் காதலர்களுக்கு குலுக்கல் சீட்டு முறையின்படி வெற்றியாளர்களில் 3 சிறப்பு காதல் ஜோடிகளுக்கும் , 15 காதல் ஜோடிகளுக்கும் டில்கோ ஹோட்டல் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகளும், பெறுமதிமிக்க பரிசில்களும் காத்திருக்கின்றன.

VIP Ticket ற்கு அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகளும், இரவு உணவும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கின்றது.

டிக்கட் விலைகள் ரூபா 3000 மற்றும் 6000 என்று அறவிடப்படும் இந்த கலை நிகழ்வுகளின் டிக்கெட்களை பெற்றுக்கொள்ளவும் மேலதிக தகவல்களுக்குமான தொடர்பிலக்கம் 0771100687 || 0770402829 || 0771222522 || 0763532372