ஷமீலின் இசையில் காதலர் தின ஸ்பெஷல் – காதல் வலியை இதை விட இசையால் கடத்தி விட முடியுமா?

1188

நம் நாட்டின் முன்னணி இசையமைப்பாளர் ஷமீல் J இன் இசையில் தனுவின் வரிகளில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள பாடல் “காதல் வலி”.

இந்தப்பாடலை ஷமீலுடன் இணைந்து ஸ்ரீ சங்கர் மற்றும் அபிமன்யா ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதில் வட கிழ கடலோன் மற்றும் குஜாஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஷண்முகலிங்கம் அர்ஜூன் ஒளிப்பதிவுப்பணிகளையும், விஜி Vkr படத்தொகுப்பு பணிகளையும் கவனித்துள்ளதுடன் கே.எஸ்.கண்ணன் வர்ணச்சேர்க்கை பணிகளை கவனித்துள்ளார்.

தயாரிப்பு வடிமைப்பாளராகவும், உதவி இயக்குனராகவும் JP.K சிங்கம் பணியாற்றியுள்ளதுடன் ஒப்பனையை M.M. முனீரா செய்துள்ளார்.

AVT Production சார்பில் அன்புமயில் தங்கவடிவேலு தயாரித்துள்ள இந்தப்பாடலை ஸ்ரீ சங்கருடன் இணைந்து ஷமீல் இயக்கியுள்ளார்.

காதலின் வலியை இதை விட சிறப்பாக இசையாலும், வரிகளாலும் கடத்திவிட முடியுமா? தெரியாது… அந்தளவுக்கு மிகவும் சிறப்பாக இருக்கின்றது இசை. நீண்ட நாட்களின் பின் பாடலாசிரியர் தனுவின் பாடல் வெளியாகியிருக்கின்றது. காதலின் வலியை ஆழமாக வரிகளின் மூலமாகக் கடத்தியிருக்கின்றார்.

அழகுப்பதுமையாக குஜாஷினியும் அடாவடிப்பையனாக வடகிழ கடலோனும் தங்கள் நடிப்பின் மூலம் பாடலுக்கு உயிரூட்டியுள்ளனர். காதலர் தின வெறும் கொண்டாட்டத்திற்கு மட்டுமானதல்ல, பல வலிகளுக்கும் சொந்தம் என்பது இந்தப்பாடலினூடு மற்றுமொரு முறை நிரூபணமாகிறது.

A Shameel J Musical
Directed by Shameel J & Sri Shanker
Lyrics- Thanu Thanush
Vocals – Shameel J , Abimanya & Sri Shanker.
Cast – Vada Kila Kadaloon & Kujashini
Production Designer & Assistant Director – JP.K Singham.
Director Of Photography – Shanmugalingam Arjun.
Editor – Viji Vkr
Color & Title – K.S.Kannan
MUA – M.M.Muneera (Riley Beauty Care)
Dubbing – Shazna Shameel , Shameel J & Sri Shanker
Produced by Anpumyl Thangavadivelu

குவியம் மீடியா நடத்தும் “மொபைல் குறும்படப்போட்டி” பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.