ஜனரஞ்சகமான சினிமாவுக்கான ஒத்திகையாக ”சாம் சூசைட் பண்ண போறான்”

411

தமிழ் கிரியேட்டர்ஸ் தயாரிப்பாக நிவேதிகன், ஹர்ஷானி, ஜஷி, ஸ்டீனோ, காந்தரூபன், இவாஞ்சலின், மல்கின், நெய்ல் ரெக்ஷன், மொரிஸ், சரண்ஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் குறும்படம் “சாம் சூசைட் பண்ண போறான்”.

ஜனரஞ்சகமான சினிமாவுக்கான பரீட்சார்த்த முயற்சியாக எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி செல்வம் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீ துஷிகரன் கவனித்துள்ளார். பிரணவன் இசையமைத்துள்ளார்.

ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ், டைட்டில் டிசைன் ரஜீவன், மக்கள் தொடர்பு துவாரகன்.

“சாம் சூசைட் பண்ண போறான்” டைட்டிலே வித்தியாசமாக இருக்கின்றது. பல முன்னணி கலைஞர்கள் இதில் இணைந்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து படக்குழு தமது சமூக வலைத்தளங்களில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது, ”ஒரு முழுமையான ஜனரஞ்சகமான சினிமாவுக்கான ஒத்திகையாக இந்த 20 நிமிட சினிமாவை முயற்சித்துள்ளோம். கருத்து சொல்லுதலோ, ஆழமான உள்ளடக்கமோ இதிலில்லை…

தொழில்நுட்ப ரீதியாக திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு போன்றவற்றை முன்னிறுத்தி இயன்றவரை எமது சக்திக்கு உட்பட்டு ஜனரஞ்சக சினிமாவாக முயற்சித்துள்ளோம்.

மிக விரைவில் Ceylon Pictures youtubeல் வெளியாகும் எம் சினிமாவை பார்த்து எந்தவித எல்லைகளும், சமரசமும் பச்சாபாதமும் இன்றி தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள். Making நன்றாக இருந்தால் நாலு பேருக்கு சொல்லுங்கள்”