போர் தந்த தனிமை “கண்ணே” குறும்படம்

155

பூவரசி மீடியா தயாரிப்பாக வெளிவந்திருக்கும் “கண்ணே” குறும்படம் பற்றி நிச்சயமாக பேச வேண்டும்.

ஒருவரை ஏதாவது ஒன்றிற்கு பழக்கிவிட்டு இடையில் நிறுத்திவிட்டால் அதன் வலி கொடூரமாகும். அறிந்தோ அறியாமலோ அந்த பழக்கத்தை ஏற்படுத்திவிடுகிறோம்.

பாடசாலைக்காலத்தில் ஒரு மாணவன், மாணவியை சேர்த்து வைத்து கதைப்போம். அது பின்னாளில் காதலாகி பிரிந்து சிலவேளை படிப்புமின்றி துன்பப்பட்ட சந்தர்ப்பங்கள் பார்த்திருப்போம். அதே போல் ஒரு நிலைதான் இந்த படைப்பும்.

ஆற்றங்கைரை.. பச்சைபசேலென படப்பிடிப்போடு ஆரம்பித்த இயக்குனர் கமெராவை இறக்கி அமைதியான ஆறு பொங்கி பாய்வதை காட்டி, நாயகன் – நாயகியை அறிமுகப்படுத்துகிறார்.

பாத்திர தெரிவு சிறப்பாக இருக்கிறது. கமெரா அசைவு, காட்சிப்படுத்தப்பட்ட விதம் மிக அழகு. இயக்குனர் காட்சிப்படுத்தலில் சிறப்பித்திருக்கிறார். ஆற்றில் நாயகனை ஒரு கண்ணை மூடி பார்க்கும் அழகு காதலின் உச்சம், முடிவில் காதலுக்கும் பகுத்தறிவு இருக்கிறது என்று நாயகியை எண்ண வைக்கிறது.

நாயகன் – நாயகி இருவரும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் சைக்கிள் பெல் அடிப்பதன் ஊடாக இருவருக்கும் ஒரு வகை ஈர்ப்பு உருவாகிறது. அந்த சைக்கிள் மணி கூட மாட்டு மந்தைக்கு அடிப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.

இடிந்த வீட்டில் கிராமிய கிடுகு பின்னல், சட்டிபானை கழுவலில் காதல் பேசல், பூனையின் களவு, நாய்களின் அன்பு, பசுக்கள் போகும் வீதி, இருபக்க பற்றைகள் என அழகான காட்சி இடங்கள்.

மணி ஓசைக்கான நாயகியில் சிரிப்பு தனி அழகு. வாழ்த்துக்கள். யாருமே எதிர்பார்க்க முடியாத முடிவை இலகுவாக வைத்து முடித்திருக்கிறார் படத்தை.

இங்கு ஒரு உளவியல் இருக்கிறது. ஒருவருக்கு வெளியில் ஒரு துன்பம் சிறிதாக மனதை தாக்கினால் அந்த துன்பம் ஆழ்மனது துயரை கிண்டி வெளிக்கொணரும். அதனை நாயகியில் காண முடிகிறது. அவரது நினைப்பு காட்சியில். கமெரா அழகாக காட்சி படுத்தியிருக்கிறது.

ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள். இசையும் பக்க பலம். ஈர்ப்பான இசையமைப்பு. மனதை தொடுகிறது. ஆற்றங்கரை உல்லாச குளியலில் முதலை வர ஓடுவதை போல முடிவு. மனதை தொட வைத்திருக்கிறார் இயக்குனர் பசுந்திர சசி.

போரின் வடுக்கள் தான் நம் மண்ணில் எத்தனை எத்தனையோ.. அத்தனையையும் பேச வேண்டும். எல்லாமே காலத்தின் கண்ணாடி. வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு..

PRODUCTION – POOVARASHI MEDIA
PRODUCER – PASUNTHIRA SASI
STORY I SCREENPLAY | DIRECTION – PASUNTHIRA SASI
CO DIRECTOR – EZHAVAANI
ASSOCIATE DIRECTOR – VITHURSHAN GANESH
DOP-REGI SELVARASA
MUSIC-PATHMAYAN SIVA
EDITOR-ALEX KOBII
CAST – KEERTHY & RK STARK
COSTUMER – THANUSHA
MAKE UR – ANDREW JULIUS
ART DIRECTOR – VS SINTHU
SFX – JEYANTHAN WICKY
DI – WISH
ASSISTANT DIRECTORS – SHAYANTHY | T. RISHANTHAN
LINE PRODUCER – MARINA
PRODUCTIONS – JENI JEEVAN
PRODUCTION MANAGER – VITHURSHAN GANESH
PUBLICITY DESIGN – SAZI BALASINGAM