இசையிலும் இயக்கத்திலும் அசரடித்த “உனைச்சேரவே” பாடல்

791

யாரோ யாரோ பாடி, யாரோ யாரோ நடித்து, யாரோ யாரோ இயக்கி, யாரோ யாரோ வேடஉடை ஒப்பனை செய்து, வந்த யாரோ யாரோ பாடல்.

பாடல் வரிகள் அப்படித் தான் ஆரம்பிக்கின்றன. ஜெறாட் நோயல் – மான் விழி நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது “உனைச்சேரவே” பாடல். இந்தப்பாடலுக்கான இசையை “புட்டுப்பாட்டு“ புகழ் வெற்றி சிந்துஜன் அமைத்துள்ளார்.

ராஜகுமாரந்தான் ஒவ்வொரு காதலரும்.. காதலிகளும் என்ன குறைவா… அவர்களும் தேவதை வம்சத்து இளவரசிகளே.

இளவரசன் புல்லாங்குழல் இசையை மீட்க  இளவரசிதான் என்று வரும்போது அவரது கற்பனை உடைகிறது.. மிகுதி பாட்டைப்பார்ப்பதே அழகு.

அழகான காதல் பாடல். மெல்லிசை. காதில் ஒலிக்குதோ இல்லையோ மனசுக்குள் பாடும். சிந்துஜனின் குரலுடன் ஆரம்பித்து மதுஸ்ரீயின் குரலும் இணைந்து கொள்கின்றது. உணர்ச்சி வெளிப்படப்பாடியிருக்கிறார்கள்.

பாடலாசிரியரின் எண்ணத்தில் தோன்றிய காதல் காதலின் ஏக்கம் அருமையானது.
“கண் மூடினாலும் மண் மூடினாலும்” வரிகள் என்னை தொட்டவரி. எப்போது காதல் ஆரம்பிக்கிறதோ அப்போது இது நம்பிக்கை வரிகள்.

பாடலாசிரியரின் (லதீப் பாலசுப்ரமணியம்) எண்ணத்திற்கு சிறப்பாக இசையமைத்து, படலுக்கேற்ற குரல்வளமும் ஒத்து போகும் ஆண் – பெண் பாடகர்களை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். இசையோடு ஒலி விளைவுகள் குழப்பமில்லாமல் இணைந்திருக்கிறது. வாழ்த்துகள்.

பெரிய பொறுப்போடு தனது கற்பனை ஆற்றலோடு உனைச்சேரவே இராஜகுமாரன், இளவரசி பாத்திரங்களை படைத்திருக்கிறார் இயக்குநர். பெரியதொரு முயற்சி. வெற்றிதான்.

நடிகர்கள் தெரிவும் சிறப்பு. பாத்திரவாக்கம் அருமையானது. ராஜகுமாரன் (ஜெறாட்) சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளார். அழகான வசீகரத்தோற்றம். இன்னும் மெருகூட்டும் வகையில் வேட உடை ஒப்பனை. இயல்பாக கவர்ச்சியான தோற்றம்.

நாயகி (மான் விழி) சிறப்பான நடிப்பு. ஆடை அணிகலன் சிறப்பு. இன்னும் கொஞ்சம் முகஅலங்காரம் பார்த்திருக்கலாமோ என தோன்றுகிறது.

ஒப்பனை கலைஞரே சிறப்பு. பணி சிறப்பு. என்ன ஒப்பனை கலைஞர்களை பார்க்க முடிவதில்லை. அவர்கள் உணர்வை பார்க்க முடியும். சிறப்பான உருவாக்கம் இந்த பாடலுக்கு. ஒப்பனை மற்றும் கலை இயக்கப்பணிகளை பார்த்துக் கொண்ட டேரியனுக்கு வாழ்த்துக்கள்.

இயக்குனருக்கு வாழ்த்துகள். இந்த மாதிரி ஒரு பாடலை இப்பொழுது எடுப்பதென்பது எங்கள் கலைஞர்களுக்கு சவாலானது. இருக்கும் வளங்களை வைத்துக் கொண்டு அசத்தியிருக்கிறார்கள். எங்களால் பிரமாண்டங்களை தரமுடியாவிட்டாலும் பிரமாதங்களையாவது தரலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.

இப்படியான கலையம்சங்களை தாங்கி மேலும் பல படைப்புகள் வெளிவரவேண்டும். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..

Music Composed by Vetti Sinthujan (Rhythm Music Studio)
Singers: Vetti Sinthujan , Mathusri Aadhithan
Produced by Ajithsuvendra
Director : T Vinoth ( VM Film Makers)
Lyricist : Latheep Balasubramaniyam
Cast : Jerad Noel | Maan Vizhi | Nithan | Jenin
DOP : Janushan , Vithusan
Edit : Vithusan (KVM Creations Studio)
Associate Director & Art Direction : Suvikaran MSK
Assistant Director : Rakeethan
Makeup & Art Direction : Derian
Costumer : Hamshayini
Production Manager : Alfred Athavan
Title Design : Vithurshan (Shuttersmile Studio)
Publicity Design : V Mathushan
Pro : Ilamaran
VFX : Sinthujan
Drone : Robin

இந்தப்பாடலின் வெளியீடு அண்மையில் யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற காதலர் தின சிறப்பு நிகழ்வில் தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் மற்றும் பின்னணிப்பாடகர் அஜய் கிருஷ்ணா ஆகியோரால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.