நாளை முதல் திரையரங்குகளில் ரதிதரனின் “தூவானம்” திரைப்படம்

930

வைத்திய கலாநிதி சிவன் சுதன் தயாரிப்பில் ரதிதரன் இயக்கத்தில் உருவான “தூவானம்” திரைப்படம் நாளை முதல் தமிழர் தாயகத்தில் திரையிடப்படுகின்றது.

அதற்கமைய வெளியீட்டு திகதிகள் மற்றும் திரையரங்குகளை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கமைவாக நாளை முதல் நாளில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை யாழ். ராஜா திரையரங்கில் படம் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன் விபரங்களை கீழ்வரும் சுவரொட்டியில் பார்க்க முடியும். 👇

தூவானம் Releasing Promo