கண்ணோரம் கண்ணீரை வரவழைக்கக் கூடிய “கண்ணோரம்” பாடல்

1019

இளமாறன் இசையில் எஸ்.எஸ்.கெமல் இயக்கத்தில் திஷான் – வினு ஆயிஷா நடிப்பில் வெளிவந்துள்ள பாடல் “கண்ணோரம்”.

இந்தப்பாடலுக்கான வரிகளை ஜொனி எழுதியுள்ளதுடன், அஜய் பாடியுள்ளார். காணொளிப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கதிர் கவனித்துள்ளார்.

மலைநாட்டை நோக்கிய நீண்ட நெடிய பயணம், மயானம், நீர்வீழ்ச்சி என்று அடுக்கடுக்காக மாறும் காட்சிகள் நாயகனின் சோகத்தை காட்டி அதற்கான காரணத்தை அடுத்தடுத்த காட்சிகளின் ஊடு நகர்த்துகின்றது.

ஒரு வலுவான நாயகன் தன் துணையின் பிரிவால் உடைந்து போவதை திஷான் தன் நடிப்பினூடு சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார். கதிர் வழக்கம் போல தன் காட்சிக் கவ்வல்களால் பாடலை மெருகூட்டியிருக்கிறார்.

இசையும், பாடியவரின் குரலும் பாடலின் போதை.. சோகம் ததும்பிய வரிகளை உணர்வுடன் பாடியுள்ளார். சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பாடலுடன் வந்திருக்கும் இயக்குனர் கெமல் உள்ளிட்ட பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

DIRECTOR – SS KEMAL
MUSIC COMPOSER- ILAMARAN
DOP & EDITOR – KATHIR
VOCAL – AJAI
LYRICS – JONI
CASTING – THISHAN & VINU AYISHA
PRODUSER – KATHIR
PRODUCTION MANAGEMENT – SIBOJAN & SUVIKARAN MSK
ART – RK STARK

குவியம் மீடியா நடத்தும் மொபைல் குறும்படப்போட்டி பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.