My friends Production தயாரிப்பாக டெனிஸ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறும்படம் “விசாரியன்”. இந்தக் குறும்படத்திற்கான ஒளிப்பதிவை பெனடிக் மேற்கொண்டிருப்பதுடன் படத்தொகுப்பை Ketessh உம் மேற்கொண்டுள்ளனர். லிபிஸ் இசையமைத்துள்ளார்.
ராஜேஸ், சசிகலா, ஹிந்துஜன் மற்றும் ருபதரன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இயக்குனர் ஆகவேண்டும் என்ற பெருங்கனவுடன் பயணிக்கும் நாயகன், தன் காதலின் பிரிவால் துவண்டு போவதுடன், தன் கனவுப் பாதையில் இருந்து விலகி உடைந்து போகும் நிலையில் மீண்டும் காதலி குறிக்கிடுவதாக படம் முடிவடைகிறது.
நாயகன் தன் கனவில் ஜெயித்தாரா? என்பது மீதிக்கதை..
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, டப்பிங் என தொழில்நுட்ப ரீதியில் இன்னமும் மேம்பட வேண்டிய படைப்பு இது. இந்தப்படத்தை ஒரு படிக்கல்லாக வைத்துக் கொண்டு அடுத்துவரும் படங்களில் இவர்கள் இன்னும் நன்றாக பணியாற்றுவார்கள் என்று நம்பலாம். வாழ்த்துக்கள் படக்குழுவிற்கு…