பாராட்டு மழையில் “சாம் சூசைட் பண்ண போறான்” குறும்படம்

576

படைப்பாளிகள் உலகம் சார்பில் ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் ஜீவதர்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள குறும்படம் “சாம் சூசைட் பண்ண போறான்”.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை ரிஷி செல்வம் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை ஸ்ரீ துஷிகரனும், இசையமைப்பை பிரணவனும் மேற்கொண்டுள்ளார்கள்.

நிவேதிகன், அஞ்சலி ஹர்ஷானி பிரதான பாத்திரமேற்று நடிக்க துணை நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சிம்பிளாக ஒரு கான்ஷெப்ட்.. அதை எடுத்து காதல், நகைச்சுவை, விறுவிறுப்பு என கலந்து மண்ணின் இயல்பு மாறாமல் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் ப்ளஸ்.

நடிகர்களின் நடிப்பு தத்ரூபம். அதுவும் பொதுவான யாழ்ப்பாணத் தமிழுடன் அவர்கள் ஊரின் பேச்சுவழக்குகளும் ஒட்டிக்கொள்ள வசனங்கள் எல்லாம் “நச்” ரகம்.

பெரிதும் பாராட்டப்படுவது “டீம் வேர்க்”. அதிலும் குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு அபரிமிதம். விரிவான விமர்சனம் ஒன்றை இன்னொரு பதிவில் பார்க்கலாம். இப்போது நீங்கள் படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.