யுத்தம் கடந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் சமர்ப்பணமாக ரத்யாவின் “அவளாலே நான்” பாடல்

343

அப்புக்குட்டி அற்புதராஜா தயாரிப்பில் கனடா தமிழ் பசங்க வெளியீடாக வெளிவந்துள்ள பாடல் ரத்யாவின் “அவளாலே நான்”.

நம் நாட்டின் முன்னணி ரப் இசைப்பாடகி ரத்யா. அவரது ‘Auto biographical song’ ஆக இது வெளிவந்துள்ளது. இலங்கை இசைத்துறையை பொறுத்தவரை வெளிவந்த முதல் auto biographical song ஆக இது விளங்குகிறது.

போரின் கொடுமையையும், அந்தப் போருக்குள் ஒரு தாயின் தியாகத்தையும் சுட்டிக்காட்டுவதாக பாடல் அமைந்துள்ளது. அதனால், இதனை யுத்தம் கடந்து வந்த அத்தனை நெஞ்சங்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

போரின் வலிகளையும், தாயின் ஓர்மத்தையும் வரிகள் ஊடு கடத்தியிருக்கிறார் ரத்யா. கனதியான வரிகள். ஆழமான வரிகளுக்கு தன் குரலினூடு அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறார். இந்தப்பாடலுக்கான இசை Pazwave.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இதனை MC Ra இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு ரெஜி செல்வராசா. படத்தொகுப்பு MC Ra மற்றும் DJ பிரஷாந்த்.

பாடலில் கீர்த்தி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். வயிற்றில் ஒன்று, கைகளில் 4 என தனது பிள்ளைகளுடன் போர் இடம்பெறும் இடங்களில் இருந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் காட்சிகள் கண்களில் கண்ணீரை வரவைப்பன.

பாடல் உருவாக்கம் முதல் காட்சிப்படுத்திய விதம் வரை நன்றாக உழைத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு..

Rap & Lyricist: Rathya
Music: Pazwave
Co-Producer: NNN
Director: MC Ra
DOP: Reji Selvarasa
Cast: Keerthy, Tharanika, Thevaiyani, Saruja S, Luxan, Krithika, Asana
Mixing & Mastering: Shameel J
Editors: MC Ra & DJ Prashanth
Makeup: Agal by Shaki
Title & Publicity Design: Charan Bawan (Atlaaya)