90 இன் காதலை அழகாக படம் பிடித்துக் காட்டிய “என்ன புள்ள செஞ்ச” பாடல்

537

DB STUDIO தயாரிப்பாக அருள் செல்வத்தின் இயக்கம், படத்தொகுப்பு மற்றும் வரிகளில் உருவான பாடல் “என்ன புள்ள செஞ்ச”. இந்தப்பாடலுக்கான இசை சகிஷ்ணா ஷேவியர். ஒளிப்பதிவு தருண் பாஸ்கர்.

என்ன செஞ்சீங்க இயக்குனர்?? “என்னடா பாவம் செஞ்சேன். சிவனே என்று எல்லாம் மறந்து இருந்தா இப்படி பாடல் எடுத்து ஏண்டா கொல்லுறியள்?” என்ற மாதிரி இருக்கு.

நம்மளை போன்ற சைக்கிளில் ரியூசன் போய் வீட்டிலிருந்து ரியூசன், ரியூசனில் இருந்து வீடு என காவல் காக்க.. இடையில் இன்னொருத்தன்பட்டெனெ காதல் சொல்லி சிரிச்சிட்டு போவானே… பட்டவனுக்குத்தான் தெரியும்.

சரி கடிதத்தை கொடுடா என்றால், அவன் அவண்ட ஆளிட்ட கொடுத்து நம்மளை இழுப்பான் பாரு…

இயக்குனரும் அந்த ரகம். அதற்கு முதல் சலூட்.

கெக்கட்டம் போட்டு சிரித்தபடி மனைவியோடு இந்த பாடலை பார்த்தாலும் மனதுக்குள் பழைய காதல் கிண்டும் தான்.

இதெல்லாம் இப்போது தெரிய வாய்ப்பில்லை. அழகான பாடல், சுவையான காதல் அனுபவம்.

கடிதம் பலதெழுதி கிழித்து பின் அதெல்லாம் சரிவராது என கிப்ட் வாங்கி கொண்டு போனால்.. அவன் காதல் செற்றானா எப்படி இருக்கும்… இதெல்லாம் உண்மை காதல்.

நாயகனும் அவருடன் வரும் சிவப்பு ரிசேட் பயலின் நடிப்பும் அப்படியே அந்த கால நினைவை பிரதிபலித்திருக்கிறனர். அந்த பாத்திரம் அவருக்குக்தான் பொருத்தம் என்பது போல் அவரது தோற்றம், நடிப்பு இருக்கிறது.

நாயகனும் எளிமையான உரையாடல். பொருத்தமான இருவர்.
நாயகியின் தோற்றம், அவர் அந்த கூட்டத்தின் தலைவியாக தானே முன் வந்தமை இதெல்லாம் இயல்பாய் அமைந்திருந்தது.

நாயகியோடு வந்த நடிகைகள் கூட இயல்பாய் நாம் பார்த்த பாத்திரங்கள் போலவே அன்னியப்ப்டுத்தாமல் இருந்தன.

இசை மிக மிக சிறப்பு, பாடல் சிறப்பு. இசை பாடலோடு ஒன்றிக்க வைக்கிறது. இசையும் இந்த பாடலுக்கு வலு சேர்க்கிறது.

ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. படமாக்கப்பட்ட விதம் மனதை ஈர்த்து வைத்திருக்கிறது. இங்கு இயக்குநர் தனது பங்கை கன கச்சிதமாக செயற்படுத்தி இருக்கிறார்.

இந்தப்பாடலைப் பார்க்கும் போது 90ஸ் கிட்ஸ் மற்றும் அதற்கு முந்தையவர்களுக்கு தங்கள் பால்ய கால நினைவுகள் வந்து செல்வது தவிர்க்க இயலாதது. குச்சொழுங்கைகளும், சைக்கிள்களும் என எவருக்கும் தொந்தவில்லாமல் காதலைக் காதலிக்க முடிந்தது.

நினைவுகளை அசைபோட வைத்த இயக்குனருக்கு சபாஷ். பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

Produce By – DB STUDIO
Story , Screenplay , Dialogue , Lyrics , Edit & Direction – Arulsellvam
Music composed and Arranged by – Sagishna Xavier
Vocals – Sagishna Xavier and Nirjany Srivijay
Cinematography – Darun Basgar
Mixed and Mastered by – Kibi
SFX & Background Score Mixed by – Prajeev Verl
DI – Thanush COPILOT
Makeup and Hair : Lajantha Kuna
Costume : Nagula Basgar
Art Director : Duva Basgar
Lighting Director : Darun Basgar
Design & Associate Director : Paranthā
Production Manager : Vanisha Sherly
Assistant Directors : Kunalan, Lajantha Kuna, Christina Grace
Voice – Duva Basgar