மிரட்டும் மது ஸ்டாலினின் “ரணம்” ட்ரெயிலர்

626

Mister MS Pictures தயாரிப்பில் மது ஸ்டாலினின் எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் “ரணம்”. இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி – அக்ஷன் கதைக்களத்தில் மிரட்டலாக இருக்கிறது ட்ரெயிலர்.

இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளையும் மது ஸ்டாலின் கவனித்துள்ளார். வி.ஆர்.ரஜீவன் இசையமைத்துள்ளார்.

கத்தி, ரத்தம், கொலை என குருதி தெறிக்கும் காட்சியமைப்புக்களுடன் ட்ரெயிலர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ட்ரெயிலரை வைத்து படத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. படம் எதைப்பற்றியது? சொல்ல வரும் சேதி என்ன? போன்ற விடயங்களை விமர்சன ரீதியாக வெளியீட்டின் பின்னரே பேச முடியும்.

சிறப்பான ஒரு முயற்சி. அதுவும் கிளிநொச்சி மண்ணில் இருந்து என்று சொல்லும் போது நிச்சயம் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். படம் விரைவில் திரை காண வாழ்த்துகின்றோம்.

Writer And Director : Mathu Stalin
Banner : Mister MS Pictures
Producer : Mathu Stalin
Music : VR Rajeevan
DOP : Mathu Stalin
Editor : Mathu Stalin
Lyrics : SJ Anojan
Singers : Tharsikan
Dubbing : VK Karikalan, RJ Ninthuja, Marine,
Kanna, Mathubalan
Sound Mixing : Prasanth Krishnapillai
Art Director : Mister MS & Team
Stunt : Mathu Stalin
Costume Designer : Mathu Stalin
Make Up : Mister MS & Team
Stils : Makinthabalan, AJ Jerone, Mathu Stalin
VFX : Mathu Stalin
Sound FX : VR Rajeevan, SJ Anojan, Kajan
DI : Mister MS Pictures
Colorist : Mathu Stalin
Publicity Designer : Mathu Stalin
Pro : Piratheeban, Parithi