தனிமையோடு போராடும் காதலில் உணர்வுகள் பேசும் “யாவும் வானமே” பாடல்

281

இலக்கிய கலைக்கூடம் தயாரிப்பாக திலீஸ் சிங்கராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் காணொளிப்பாடல் “யாவும் வானமே”.

இந்தப்பாடலுக்கான இசை ஒழுங்கமைப்பை பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை மேற்கொண்டுள்ளதுடன், பாடல் வரிகளை திலீஸ் சிங்கராஜா எழுதியுள்ளார். தரு மற்றும் லக்ஷி சுரேஷ்குமார் பாடலைப்பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலில் எம்.ஜே.செந்தூரன் மற்றும் ஜெனிபர் ஷாரா ஆகியோர் நடித்துள்ளனர். பாடல் ஒளிப்பதிவு தர்ஷன், படத்தொகுப்பு பிரியந்தன்.

இதயத்தில் காதலைச் சுமந்து இயந்திர உலகில் சுழன்று தனிமையோடு போராடும் தூரத்து காதலில் உணர்வுகள் பேசும் பாசை.. யாவும் வானமே… என்பதாக பாடல் நிறைவடைகின்றது.

காதலுக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஊடாடிக்கொண்டிருக்கும் காதலன் தன் எதிர்காலத்தை ஸ்திரமாக அமைத்துக் கொண்டு, தான் விரும்பிய காதலியையும் அடையும் விதத்தில் பாடல் படமாக்கப்பட்டிருக்கின்றது.

Voice Dharu & Luxy Sureskumar
Cast MJ Senthuran, Jenifer Shara
DOP ST Cinematic studio (tharshan)
Music Arrangement Prashanth Krishnapillai
Mix & Mastering PK Studio
Make up Rekka
Art Direction Santhan Best | Inthu Varathan
Ass Directors Santhan Best | Inthu Varathan
Editing and DI G.Priyanthan
Direction and Lyrics Thilees Singarajah
Producer Jhon Sulaxzana
Production management Ajanthu Thilees
Production house Ilakkiya kalaikkoodam