இசையில் தாலாட்டும் ஒரு காதலின் பிரிவு “முன்னொரு பொழுதினிலே”

328

Windsor productions தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய குறும்படம் “முன்னொரு பொழுதினிலே”.

இதில் விஜே ஆகாஷ், அஜிதா சந்திரசேகரன், பவித்ரா சர்மா, யசோதரன் செல்வகுமார், கிஷா ஷெபாரா, செல்வகுமார் மதுசாலினி, ஹிமேஷ் புஷ்பராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு விஜய் சங்கர், படத்தொகுப்பு ரஷிகா அருள்செல்வம், இசை ஏ.என்.அன்ட்ரூ, உதவி இயக்கம் ஹிமேஷ் புஷ்பராஜா, உதவி ஒளிப்பதிவு இம்தாட், ஒப்பனை மதுமிதா மற்றும் காயத்ரி, வர்ணச்சேர்க்கை மற்றும் VFX ஏஞ்சலோ ஜோன்ஸ்.

பாடசாலை, கல்லூரி காலங்களில் ஒரே வகுப்பில் படிக்கும் ஆண் – பெண் இருவரை சேர்த்து வைத்து பேசுவார்கள். அவர்களுக்குள் காதல் என்றெல்லாம் சொல்லுவார்கள். அப்படி பேசும் இருவருக்குள் உண்மையில் காதல் இல்லாமலும் இருக்கும்.

ஆனால், இந்தப்படத்தில் வரும் நாயகன் – நாயகிக்கு கல்லூரிக்காலத்தில் காதல் இருந்திருக்கின்றது. நண்பர்கள் சேர்த்துப் பேசுவதை ரசித்திருக்கிறார்கள். ஆனாலும் கல்லூரி முடிவதற்குள் தங்கள் காதலை வெளிப்படையாக பேசவில்லை. அது சொல்லாக்காதலாகவே செல்லாக்காசாகிவிடுகிறது.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கின்றார்கள். இப்போது இவருவருக்கும் இன்னொருவருடன் காதல் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் சொல்லாத காதல் அவர்கள் மனதில் ஏக்கங்களாக…

உணர்வுகளை காட்சிகள் கடத்துவதை விட, இசை நன்றாகவே கடத்துகின்றது. டைட்டிலில் ஆரம்பித்து எண்ட் கார்ட் வரை இசை கதை பேசுகின்றது. அன்ட்ரூவின் இசை படத்திற்கு பக்க பலம்.

ஒரு பெரும் படத்திற்கான முன்னோட்டமாகவே இக்குறும்படத்தை பார்க்க முடிகின்றது. அவ்வளவு உழைப்பு படத்தில் இருக்கின்றது. சரியானதொரு குழு அமைந்திருக்கின்றது. நிச்சயம் மிகப்பெரும் வெற்றிகளை பிரவீன் அன்ட் டீம் பெறும். வாழ்த்துக்கள்.

Written and Directed by Praveen krishnaraja
Produced by Windsor productions
Music – AN Andrew
DOP – Vijai Sanker
Editor – Rashika Arulchelvam