தாய், மகனுக்கு இடையிலான கடமை மற்றும் அன்பின் பிரதிபலிப்பு “விம்பம்” குறும்படம்

408

ஈஸ்வர் மீடியாஸ் தயாரிப்பாக கோபிநாத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய குறும்படம் “விம்பம்”. இந்தப்படத்திற்கான ஒளிப்பதிவை டொமினிக் மேற்கொண்டுள்ளதுடன், படத்தொகுப்பை ஷியாம் பிரசாத் செய்துள்ளார். கிஷோகுமார் ஜெகதீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஊரை விட்டு வெளியே வந்து நகரத்தில் வேலை தேடித்திரியும் மகனுக்கும் ஊரிலுள்ள தாய்க்குமான பாசப்போராட்டமாக இந்த படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வேலை தேடி திரியும் இளைஞனின் உள்ளக்கிடக்கைகளை நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள். பாத்திரத் தெரிவும் நடிப்பும் கச்சிதமாக இருக்கின்றது. தொழில்நுட்பங்களும் கைகொடுத்திருக்கின்றது. ஆனாலும், திரைக்கதையை சற்று வலுவாக்கி ஒரு நிறைவான குறும்படமாக இதை தருவதற்கு படக்குழு தவறியிருக்கின்றது.

தாய் மற்றும் மகனுக்கு இடையிலான கடமை மற்றும் அன்பின் பிரதிபலிப்பே “விம்பம்” என்பதாக படம் முடிகின்றது. நல்ல முயற்சி. நிறைவான படைப்பைத் தரக்கூடிய உழைப்பு இந்த இளைஞர் குழுவிடம் இருக்கின்றது. தொடர்ந்தும் நல்ல நல்ல படங்களை தருவதற்கு வாழ்த்துகின்றோம்.

Production – Eshwar medias
Sound Studio – Studio Black
DOP – AD photography
Editing – Shiyam. R Editz
film By D.Gobinath