மீண்டும் மட்டக்களப்பில் திரையிடப்படுகிறது “ரிச்சர்ட்”

189

கிருஷ்ணகுமார் பிரேமலக்ஷன் இயக்கத்தில் உருவான “ரிச்சர்ட்” திரைப்படம் கடந்த வருடம் திரையிடப்பட்டிருந்தது. மேலதிக காட்சிகள் திரையிட ஏற்பாடுகள் இடம்பெற்ற போதும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அது ஒத்துப்போடப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் அதனை திரையிடுவதற்கான முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் படத்தின் இயக்குனர் தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார். 👇

சென்ற வருடம் நாட்டின் சூழ்நிலை கருதி ரிச்சர்ட் படத்தின் சில காட்சிகளை கைவிட்டிருந்தோம். மீண்டும் அவற்றை தொடரலாம் என்று எண்ணியுள்ளோம். ஆதலால் எதிர்வரும் 25ம் திகதி உங்கள் செல்லம், செங்கல்லடி திரையரங்கில் மாலை 4.30 க்கு ரிச்சர்டை திரையிட தீர்மானித்துள்ளோம். இதில் சில திகில் உருக்கும் காட்சிகள் உள்ளதால் 16 வயதுக்கு மேற்பட்டவர்களையும், சிறுவர்களை பெற்றோருடனும் வந்து கண்டு களிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

டிக்கெட் விபரங்கள்
Odc – 350/=
Balcony – 450/=
Rnp Multi Corner – 0767633703 / 071 2164126
Sellam Theatre – 065 2240064