4 ஆண்டுகள் காத்திருப்பின் பின் வெளியாகிய மாபெரும் சரித்திரம் “கிரிவசிபுர” (மலைவாழ் மக்களின் இராச்சியம்)

178

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1780 – ஜனவரி 30- 1832) இலங்கையின் கண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ஆவார். அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது, இவர் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார்.

இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட இவர் சிறை பிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டு வேலூரில் சிறை வைக்கப்பட்டார்.

இவர் தமிழ் நாட்டின் மதுரை நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன், இவரது இயற்பெயர் கண்ணுசாமி. இவரிற்கு முதலில் நாட்டை ஆண்ட ஸ்ரீ ராஜாதிராஜ சிங்கனின் மருமகன் ஆவார்.

முடிசூட்டலின்போது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் என்னும் சிம்மாசனப் பெயருடன் கண்ணுசாமி முடி சூட்டப்பட்டார். இவரைச் சுற்றி நகரும் அரசியல் சூழ்ச்சி, துரோகம் இவற்றை கதையாகக் கொண்டு இயக்கப்பட்டது தான் “கிரிவசிபுர” GIRIVASSIPURA (மலைவாழ் மக்களின் இராச்சியம்) இதன் இயக்குனர் DevindaKongahage.

இலங்கை சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவுடன் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நம்மவர்களான நடிகை நிரஞ்சனி ஷண்முகராஜா மற்றும் நடிகர் எல்ரோய் அமலதாஸ், நடிகை நவயுகா, நடிகை ஜூலியானா ஆகியோர் நடித்துள்ளனர்.

நீண்ட காலத்தின் பின், அதாவது இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டு 4 ஆண்டுகளின் பின் நாடு முழுவதும் 16 திரையரங்குகளில் இது வெளியாகியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இதன் சிறப்பு காட்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.