‘வெளிநாட்டுக்காசு’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது!

178

சசிகரன் யோ இயக்கத்தில் டேறியன், விதுர்சன், பூர்விகா, ரெமோ நிஷா, ஜெனிஸ்டன், சபேசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளிவந்த வெப் தொடர் “வெளிநாட்டு காசு”.

தற்சமயம் இதனை திரைப்படமாக கத்தரித்து, மெருகேற்றி திரையிட காத்திருக்கின்றது படக்குழு. இதற்கான பணிகள் முழு வீச்சில் இடம்பெற்று வரும் நிலையில், படத்தின் ட்ரெயிலர் நேற்று (22) வெளியிடப்பட்டுள்ளது.

“கொரோனா அச்ச காலப்பகுதியில மூன்று லட்சங்களில் மட்டுப்படுத்த தொழிநுட்ப வளங்களுடன் உருவாக்கப்பட்ட 2.30 மணி நேர நகைச்சுவைத் திரைப்படம் “வெளிநாட்டுக்காசு”. நீண்ட ஒரு முயற்சியின் பின்னர் உங்களை நோக்கி திரையரங்குகளில். எங்கட கதை எங்கட படம் இனி உங்களுக்காக உங்கட படமாக.
வெளிநாட்டுக்காசு திரைப்படத்தின் முன்னோட்டம் இதோ!”
என படக்குழு குறிப்பிட்டுள்ளது.

விரைவில் இதன் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.