சந்தியெல்லாம் முளைக்குது புதுச்சிலை – நெத்தியடியாக சிவி இன் “பச்ச மட்ட“ பாடல்

120

தமிழன் படைப்பகம் தயாரிப்பில் சொல்லிசைக்கலைஞர் சி.வி.லக்ஸ் இன் இசை மற்றும் வரிகளில் வெளிவந்துள்ள பாடல் “பச்ச மட்ட”.

இந்தப்பாடலை சி.வி.லக்ஸூடன் இணைந்து ஸ்ரீ நிரோ பாடியுள்ளார். இசைக்கலவை தினேஷ் நா. எஸ்ஜி. பிரகாஷ், பிரகாசினி, பிரசாந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

காணொளிப்பாடலை அரவிந்த் ரமணன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஆதி AOD கவனித்துள்ளார். துரைசிங்கம் வாகீசன் நடன இயக்கம். அவரது ஹிமாலயா மாணவர்கள் நடனக்கலைஞர்களாக சிறப்பான நடனத்தை வழங்கியுள்ளனர்.

சொல்லிசைக்கே உரிய தனித்தன்மையுடன் சம கால நாட்டு நடப்புக்களை பிரதிபலிப்பது போல அட்டகாசமான வரிகளுடன் வெளிவந்துள்ளது பாடல்.

போரின் தாக்கம் முதற்கொண்டு போதைப்பொருள் பாவனை, அரசியல்வாதிகளின் ஏமாற்று வேலைகள், சந்திக்கு சந்தி சிலை வைப்பு என பல விடயங்களையும் பாடலில் சொல்லியிருப்பதுடன், அழகாக அதனை காட்சிப்படுத்தியும் உள்ளனர்.

இயக்குனர் அரவிந்த், நடன இயக்குனர் வாகீசனின் கூட்டு உழைப்பு பாடலில் தெரிகின்றது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் அட்டகாசம். வாழ்த்துக்கள் பாடல் குழுவினருக்கு…

பாடல் விமர்சனம்

Director – Aravinth Ramanan
Music – Cv laksh
Artists – Cv laksh ft Sri Niro
Cinematography and Editing – Aathy_AOD
Dance Choreography – Thuraisingam Vakesan
Mixed & Mastered by Thinesh NA
Poster Design – TN sathies
Producer : SG Piragash , Piragasini , Pirasanth
Label : தமிழன் படைப்பகம் TamilanProduction.PVT.LTD