குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023 – TOP 10 Short films

855

குவியம் மீடியா பெருமையுடன் முதல் தடவையாக நடத்தியுள்ள “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023” இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள நிலையில் முதல் 10 இடங்களைப் பிடித்த குறும்படங்களின் விபரங்களை அறிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.

இந்தக் குறும்படப்போட்டிக்கென மொத்தமாக 63 குறும்படங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் எமது போட்டி விதிகளுக்கு உட்பட்ட குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றின் மீதான மதிப்பீடு இரண்டு கட்டங்களாக இடம்பெற்றிருந்தது.

இறுதிப்போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட 15 குறும்படங்களை சிறப்பு நடுவர்களான ஒளிப்பதிவாளர் ஏ.கே.கமல், படத்தொகுப்பாளர் – கணனி வரைகலைஞர் தங்கவேல் சிவநேசன், நடிகர் – ஊடகவியலாளர் எல்றோய் அமலதாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜெறி ஸ்டலின் ஆகியோர் பார்வையிட்டு தங்கள் மதிப்பீடுகளை வழங்கியிருந்தனர்.

அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 10 குறும்படங்களின் விபரங்கள் இவை 👇

30 செக்கன்ஸ் – இயக்குனர் கெனிஸ்டன் ஜோன்

போதை கணமே – இயக்குன் அஜந்தன் உதயகுமார்

போதையின் கூலி – இயக்குனர் சந்திரகுமார் கோபிகன்

கனா நீ – இயக்குனர் அர்ஷிக்கா ராஜேஸ்வரன்

மெய்யறியாமை கொளல் – இயக்குனர் சங்கீர்த்தனா அருளானந்தா

மௌட்டியம் கொல் – இயக்குனர் RJ BENAYA

பந்தயம் – இயக்குனர் அரவின் ரமணன்

உயிரைக்கொல்லும் போதை வேண்டாம் – இயக்குனர் எம்.விவிக்தன்

வசம் – இயக்குனர் கே.கோடீஸ்வரன்

யாவரும் கேளீர் – இயக்குனர் கவிவர்மன்

முதல் 03 இடங்களையும் பெறும் குறும்படங்கள் விருது விழாவில் அறிவிக்கப்படும் என்பதுடன் அந்த மூன்று குறும்படங்களும் அங்கு திரையிடப்பட்டு அது தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

முதல் பரிசு: ரூபாய் 50,000 மற்றும் வெற்றிக்கேடயம்
இரண்டாம் பரிசு: ரூபாய் 30,000 மற்றும் வெற்றிக்கேடயம்
மூன்றாம் பரிசு: ரூபாய் 20,000 மற்றும் வெற்றிக்கேடயம்

விருது விழா தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும்.