நாளை “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு

1000

குவியம் மீடியா பெருமையுடன் நடாத்திய “குவியம் மொபைல் குறும்படப்போட்டி 2023“ இன் விருது வழங்கல் நிகழ்வு நாளை (சனிக்கிழமை) மாலை 03.30 மணிக்கு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

“உயிரைக்கொல்லும் போதைப்பொருள்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்தக் குறும்படப்போட்டிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து 63 குறும்படங்கள் கிடைக்கப்பெற்றன.

அவற்றில் சிறந்த 10 குறும்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இயக்குனர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

அதேவேளை, முதல் 03 இடங்களையும் பெறும் குறும்படங்கள் விருது விழாவில் அறிவிக்கப்படும் என்பதுடன் அந்த மூன்று குறும்படங்களும் அங்கு திரையிடப்பட்டு அது தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.

முதல் பரிசு: ரூபாய் 50,000 மற்றும் வெற்றிக்கேடயம்
இரண்டாம் பரிசு: ரூபாய் 30,000 மற்றும் வெற்றிக்கேடயம்
மூன்றாம் பரிசு: ரூபாய் 20,000 மற்றும் வெற்றிக்கேடயம்

இந்த நிகழ்ச்சிக்கான பிரதான அனுசரணையை துளி நற்பணி மன்றம் வழங்குகின்றது.

இணை அனுசரணையை IDM Nations Campus Jaffna, 2J Movies, Poovarashi, Kiruba Learners, Yarl Smart water solutions மற்றும் Raavana Creations ஆகியன வழங்குகின்றன.

Official photography partner – Studio Dream Warriors

Official Online media partner – VJ TV HD மற்றும் Tamilnews1

Official Printing partner – Pragaby Printers