காதலும் அழகு; கிராமமும் அழகு – தமோ பிரமேந்திரனின் “கிளிவெட்டி” பாடல்

181

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் நம்மவரான தமோ பிரமேந்திரனின் தயாரிப்பு மற்றும் வரிகளில் உருவான “கிளிவெட்டி” என்ற பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது.

கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் கிளிவெட்டி. அதன் அழகை வெளிப்படுத்தும் விதமாக ஒரு காதல் காட்சி அமைத்து பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப்பாடலுக்கான இசையை விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் சாய்சரண் அமைத்துள்ளதுடன், மற்றுமொரு சூப்பர் சிங்கர் பிரபலம் ஹரிபிரியாவுடன் இணைந்து அவரே பாடியுள்ளார்.

காணொளிப்பாடலை எஸ்.என்.விஷ்ணுஜன் இயக்கியுள்ளார். பாடலில் ஆதி திரு மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்புக்களின் பெரும் பகுதி இலங்கையிலும், சில பகுதிகள் இந்தியாவிலும் எடுக்கப்பட்டுள்ளன.

பாடலின் குவியம் விமர்சனத்தை பார்க்க..