வவுனியாவில் நாளை “சபா” திரைப்பட சிறப்புக்காட்சி

406

VKSTAR குமணனின் இயக்கத்தில் உருவான “சபா” திரைப்படம் நாளை (22) சிறப்புக்காட்சியாக வவுனியா அமுதா திரையரங்கில் மாலை 5 மணிக்கு காட்சிப்படுத்தப்படவிருகின்றது.

இந்தக்காட்சிக்கான ரிக்கெட்டுக்கள் தற்சமயம் விற்கப்பட்டுக்கொண்டிருப்பதனால் 0762588968, 0761644245, 0775779657 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என படக்குழு அறிவித்துள்ளது.

VKSTAR குமணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை VKSTAR குசேலன் அமைத்துள்ளார். RVM ரமேஷ் மற்றும் SCANOW ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளதுடன் VKSTAR ஸ்ரூடியோவினர் படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பு பணிகளை கவனித்துள்ளனர்.

படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று வவுனியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர். 👇

படத்தின் ட்ரெயிலரை பார்க்க..