ஆக்கோ ரணில், ரஷெல் அரோஷினி நடிப்பில் ‘Shoot with காதல்’ பாடல்

209

RS MASS Production சார்பில் எஸ்.ஆர்.ரவிஷங்கர் தயாரிப்பில் ஜீவன் ரண்டிக இயக்கத்தில் வெளியாகியுள்ள பாடல் ‘Shoot with காதல்’.

இந்தப்பாடலுக்கான இசை jmk instruments, பாடலுக்கான வரிகள் ருத் ஏஞ்சல், பாடலைப் பாடியுள்ளார் எஸ்.கே.சுதன். இசைக்கலவையை வி.செந்தூரன் செய்துள்ளார்.

காணொளிப்பாடலாக வெளியாகியுள்ள இந்தப்பாடலில் ஆக்கோ ரணில் மற்றும் ரஷெல் அரோஷினி பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். வினோத் (Joy Studio) ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளதுடன் படத்தொகுப்பு மற்றும் VFX பணிகளை சுகா கவனித்துள்ளார்.

பாடலுக்கான நடன இயக்கத்தை ரிஷ்வான் (Master) வடிவமைத்துள்ளதுடன், அதில் வரும் பரதநாட்டிய பகுதிகளை தனுஷா வடிவமைத்துள்ளார். நடனக் கலைஞர்களாக தனுஷா, பிரியா, சுகா, கஸ்தூரி, ஸ்ரேஷ்மிதா, உதேஷ், மபாஸ், ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

கலை இயக்குனர்களாக மாஸ்டர், சசி, ஜனுஷிகா சிவராஜன் மற்றும் மபாஸ் பணிபுரிந்திருப்பதுடன், ஒப்பனையை சலூன் நிஷா மேற்கொண்டுள்ளது.