கர்ணன் படைப்பகம் பெருமையுடன் நடாத்தும் குறும்படப்போட்டி – விபரம் உள்ளே 👇

451

தலைப்பு – நாளைய உலகம் இளையோர் கையில்

இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் படைப்பாளிகள் பங்குபற்றலாம்.

நிபந்தனைகள்
👉படைப்புக்கள் தமிழில் இருக்க வேண்டும் (ஆங்கிலத்தில் உப தலைப்பு இருப்பது விரும்பத்தக்கது)
👉போட்டியாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.
👉15 நிமிடங்களுக்கு மேற்படலாகாது.
👉எதிர்காலத்திற்கான இளையோரின் பங்களிப்பு குறித்து விளக்கும் வகையில் கருப்பொருள் இருக்க வேண்டும்.
👉குறிப்பிட்ட நபர் அல்லது மதத்தை சாடும் வகையில் கருத்துக்கள் இருந்தால் நிராகரிக்கப்படும்.
👉ஆவணப் படங்கள் (Documentary films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
👉யு-ரியூப் உள்ளிட்ட வேறெந்த சமூக ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படாததாக இருக்க வேண்டும்.
👉ஒளிப்பதிவு செய்ய கையடக்கத்தொலைபேசிகளையும் பயன்படுத்தலாம்.
👉வேறு நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ காப்புரிமை உள்ள இசையைப் பயன்படுத்த முடியாது.

👉குறும்படங்களை HD (1080) தரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
👉தெரிவு செய்யப்படும் குறும்படங்கள் கர்ணன் படைப்பகம் (Karnan Creations) யு-ரியூப் பக்கத்தில் தரவேற்றம் செய்யப்படும்.
👉புள்ளியிடலில் 50 சதவீதம் மக்கள் தெரிவாக (Youtube views) இருக்கும்.
👉நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

உருவாக்கப்படும் குறும்படங்கள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் cinema4tomorrow@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

முதல் பரிசு: ரூபாய் 50,000 மற்றும் வெற்றிக்கேடயம்
இரண்டாம் பரிசு: ரூபாய் 30,000 மற்றும் வெற்றிக்கேடயம்
மூன்றாம் பரிசு: ரூபாய் 20,000 மற்றும் வெற்றிக்கேடயம்

4 முதல் 10 இடங்களைப் பெறும் குறும்படங்களுக்கு தலா 5000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படும்.

குறும்படத்தில் பணியாற்றிவர்களின் விபரங்களுடன் இயக்குனரது முழு விபரம் மற்றும் தொலைபேசி இலக்கத்தையும் எமக்கு உங்கள் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கவும்.

மேலதிக தொடர்புகளுக்கு – தொலைபேசி 0771777434

கர்ணன் படைப்பகம் நடாத்தும் இந்த குறும்படப்போட்டிக்கு குவியம் மீடியா ஊடக அனுசரணையாளராக (Media Partner) இணைந்துள்ளதுடன் போட்டிகளை முழுமையாக நடத்தி முடிக்கும் பொறுப்பும் குவியம் ஊடகக்குழுவினருக்கு கர்ணன் படைப்பகத்தினால் வழங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம்.