தமிழின் பெருமையைப் பேசும் “தகத்தகாய தமிழே” பாடல்

358

தமிழின் வரலாறு மற்றும் பெருமையை எடுத்துரைக்கும் நோக்கத்தில் உருவான ஒரு முயற்சி “தகத்தகாய தமிழே”. இது மருத்துவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களால் மட்டு கலைஞர்கள் பலரின் உதவியுடன் உருவாக்கப்பட்ட படைப்பு.

இதன் காட்சியாக்கத்திற்கு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவக மாணவர்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

வித்யாருண்யன் இசையில் உருவான இந்தப்பாடலுக்கான வரிகளை எழுதியிருப்பதுடன் அதனை இயக்கியுள்ளார் சஜீத்தன். விவியன் த்ரிஷான், சபேசன், நிசேவிதா, சுரஞ்சிதா ஆகியோர் பாடலைப்பாடியுள்ளனர்.

சஞ்சித் லக்ஸ்மன் ஒலிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை பணிகளைக் கவனித்திருப்பதுடன், எஸ்.என்.விஸ்ணுஜன் பாடலின் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவுகளை புஸ்பகாந்த், கேனுஜன் மற்றும் விவியன் ஆகியோர் கவனித்திருப்பதுடன், கணேசலிங்கம் புஷ்பகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.

ஆதி டிரு, டறில் டியூக், பிரியந்தன் மற்றும் நிசேவிதாவுடன் பல அணி சேர் கலைஞர்களும் இந்த பாடலில் நடித்துள்ளனர். பாடலை சஜீத்தன், கேதுஜன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இசை உருவாக்கம் – GVA Musix கலையகம்.