அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புக்களை விடுக்கும் “மெய்நிகரே” படக்குழு

282

வின்ட்சர் புரொடக்ஷன் தயாரிப்பில் பிரவீன் கிருஷ்ணராஜாவின் இயக்கத்தில் அன்ட்ரூ இசையில் ரிஷி செல்வம் ஒளிப்பதிவில் தயாராகிவரும் முழு நீளத்திரைப்படம் “மெய்நிகரே”.

இதன் பூஜை அண்மையில் கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தினுடைய முதற்பார்வையையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புக்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. இந்தியப்பிரபலம் ஒருவர் படத்தில் இணைகின்றார் என்ற அறிவிப்பை ஏற்கனவே படக்குழு வெளியிட்ட நிலையில், அவர் யார்? என்ற அறிவிப்பை தற்சமயம் விடுத்திருக்கின்றது.

விஜய் டி.வி.யின் சரவணன் – மீனாட்சி தொடர் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் மிகப்பிரபல்யமான ரக்ஷிதா மஹாலக்ஷி “மெய்நிகரே” படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்ததுடன், தற்சமயம் அவர் கொழும்பில் படக்குழுவுடன் இணைந்துள்ளார்.

அது மட்டுமல்லாது தொலைக்காட்சி பிரபலம், நடிகர் விஜய் சாரதியும் இந்தக்குழுவுடன் இணைந்துள்ளார். இதுமட்டுமல்ல சப்ரைஸ், இன்னொரு சப்ரைஸூம் இருக்கின்றது. மற்றுமொரு சூப்பர் ஸ்டார் நடிகரும் படக்குழுவில் இணைகின்றார் என்ற அறிவிப்பை இயக்குனர் பிரவீன் கிருஷ்ணராஜா விடுத்துள்ளார்.