‘புஷ்பக27’ திரைப்படத்திற்கு U சான்றிதழ் – அறிப்பை வெளியிட்டது படக்குழு

1236

ராவணா விஷன் தயாரிப்பில் சிவநேசன் இயக்கத்தில் உருவாகிவரும் “புஷ்பக27” திரைப்படத்திற்கு “யு“ தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளதாக படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

பெருமளவு கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகிவரும் இந்த திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் கலை இயக்கம் ஆகியவற்றை சத்தியா மென்டிஸ் கவனித்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் படத்தினை இயக்கியுள்ளார் சிவநேசன்.

ஒளிப்பதிவு பணிகளை லக்ஷ்மன் ராஜ் மேற்கொண்டுள்ளதுடன், ஜெரி ஸ்டலின் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதன் ட்ரெயிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், “புஷ்பக27” படத்தினை விரைவில் வெளியிடுவதற்கு படக்குழு தயாராகி வருகின்றது.