பிரான்ஸிலும் பின்லாந்திலும் ஒரே நாளில் திரைக்கு வருகின்றது ஈழத்தின் “வெந்து தணிந்தது காடு“

61

மதிசுதாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் இலங்கைக்கு வெளியே திரையிடப்படும் மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்த சில நாட்களுக்குள்ளேயே மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியிருக்கின்றது.

ஆம், பிரதீபன் செல்வம் ஒளிப்பதிவிலும் பத்மயன் சிவாவின் இசையிலும் மதிசுதாவின் இயக்கத்திலும் உருவான இந்தத்திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னரே பல சர்வதேச விருதுகளை வென்று குவித்தது. இந்நிலையில், இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் வெளியிடப்பட்ட இப்படம் தற்சமயம் கடல் கடந்து புலம்பெயர்ந்து நம் சொந்தங்கள் வாழும் தேசங்களுக்கு செல்கிறது.

பிரான்ஸில் இத்திரைப்படம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்படுகின்றது என்கிற செய்தியை இயக்குனர் அறிவித்த சில நாட்களிலேயே பின்லாந்திலும் அதே திகதியில் படம் திரையிடப்படுகின்றது என்கிற செய்தியை இயக்குனர் மதிசுதா அறிவித்துள்ளார்.

குறித்த இரு நாடுகளிலும் வெந்து தணிந்தது காடு திரையிடப்படவுள்ள திரையரங்க விபரம், காட்சி நேரங்கள், தொடர்பு இலக்கங்கள் கீழ்வரும் போஸ்டர்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திரையிட்ட இடங்களில் எல்லாம் பெரு வரவேற்பைப் பெற்றிருக்கும் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஈழப்போரின் இறுதி நாட்களின் சில பகுதியை தொட்டுச்சென்றிருக்கின்றது. நிச்சயம் இப்படம் புலம்பெயர்ந்த எம்மவர்களின் வரவேற்பையும் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் படக்குழுவினர்க்கு வாழ்த்துக்கள்.