இலங்கையின் தேசிய உணவுக்கு ஒரு பாட்டா? – கலக்கலான “கொத்துரொட்டி” பாடல்

136

Eagle Studio தயாரிப்பில் மைக்கேல் காந்தகரனின் வரிகள் மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள பாடல் “கொத்து ரொட்டி”. இந்தப்பாடலுக்கு நிரு இசையமைத்துள்ளதுடன், சம்பத் – நிரு ஆகியோர் பாடியுள்ளனர்.

காணொளிப்பாடலாக வெளிவந்துள்ள இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ரெஜி செல்வராசா கவனித்துள்ளார். தயாரிப்பு முகாமையாளர் மற்றும் இணை இயக்குனராக ஆர்ஜே நெலு பணியாற்றியுள்ளார்.

சிகே அனுஷாந்தின் நடன இயக்கத்தில் RA1 நடனக்குழுவினருடன் சிஜே டுஜா, ஆன் நயோமி, கிருஷிகா, மைக்கேல் காந்தகரன், ஆர்ஜே நெலு, சுவிராஜன், லுக்ஷான் ஆகியோர் நடித்துள்ளனர்.

முன்பு ஒரு காலத்தில் இலங்கையின் தேசிய உணவாக நெல் அரிசிச் சோறு இருந்தது. ஆனால் இன்று காலம் மாறி விட்டது. நாடு முழுவதும் கிடைக்கும் உணவாக, பலரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த கொத்து ரொட்டி மாறிப்போயுள்ளது.

“கொத்து ரொட்டி“ என்கிற விடயத்தை வைத்து பாட்டு செய்ய வேண்டும் என்று நினைத்த பாடல் குழுவிற்கு முதலில் பாராட்டுக்கள். இதுவொரு கலக்கல் குத்துப்பாட்டு. அதற்கு ஏற்றது போல நடனக்கலைஞர்கள் வெளுத்துவாங்கியிருக்கிறார்கள். அட்டகாசமான நடனம்.

Production :- Eagle Studio
Lyrics Written and Directed by :- Michael_Kanthakaran
Production Management and Co Director : Rj NeLu
Editing and DOP :- Reji Selvarasa
music & mix – Niru
Singers – SampathT, Niru
Cast:- CJ_Dhuja, Ann_Niomy, Kirushika, Michael_Kanthakaran, RJ_Nelu, Suvirajan, Lukshan
Art Direction and Lighting :- ICON_Entertainment
Design :- Rajeevan_Thayaparan
Choreography :- CK Anushanth
Dancers :- RA1_Dance Team