வடக்கின் தொன்மக்குரல் – திரையிடலும் விருது வழங்கல் நிகழ்வும்

79

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட, ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

படைப்பாற்றுகை போட்டி இல.01 இல் முதல் இடத்தினை சர்மிளா சிவராஜாவும், இரண்டாம் இடத்தினை எஸ்.துவாரகனும், மூன்றாம் இடத்தினை கெங்காதரன் மயூரிகாவும் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக இந்த போட்டிக்கென அனுப்பி வைக்கப்பட்ட படைப்புக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 5 படைப்புக்கள் திரையிடப்பட்டு அது தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் திரை துறை சார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.