குவியம் விருதுகள் 2023 – அறிவிப்பு இல. 01

699

(திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிப்பாடல்கள், வெப் தொடர்கள் மற்றும் ஆவணப்படங்கள்)

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ‘குவியம்’ இணையத்தளமானது எம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த வருடம் “குவியம் விருதுகள் 2022” ஐ நடாத்தியிருந்தது.

குவியம் இணையத்திற்கும் எங்களது முயற்சிகளுக்கும் படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் தரும் ஆதரவு எங்களை மேலும் உற்சாகமூட்டுகின்றது.

கடந்த வருடம் குறும்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் காணொளிப்பாடல்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்பட்ட போதும், இம்முறை பலரது கோரிக்கைகளுக்கு அமைய திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் உள்ளீர்க்கத் தீர்மானித்துள்ளோம்.

அதற்கமைய ‘குவியம் விருதுகள் 2023’ இற்கான அறிவிப்புக்களை தற்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகின்றோம்.

பொதுவான நிபந்தனைகள் :

  • ஒரு படைப்பின் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப முடியும். (வேறு நபர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு இடமின்றி நிராகரிக்கப்படும்)
  • குறித்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களுக்கான விண்ணப்பங்களையும் அனுப்ப முடியும்.
  • இணையத்தில் வெளியான படைப்புக்களுக்கு அதன் இணைப்பை (link) அனுப்பினால் போதுமானது. ஏனையவர்கள் Google drive அல்லது வேறு முறையை பயன்படுத்தி எமது மின்னஞ்சலுக்கு படைப்புக்களை அனுப்பலாம்.
  • இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படைப்புக்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

திரைப்படங்கள்

2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் வெளியான திரைப்படங்களை அனுப்ப முடியும்.
60 நிமிடங்களுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

குறும்படங்கள்

25 நிமிடங்களுக்கு மேற்படலாகாது.
01.01.2022 முதல் 31.03.2023 வரையான காலப்பகுதியில் வெளியான குறும்படங்களை அனுப்ப முடியும்.

காணொளிப்பாடல்கள்

01.01.2022 முதல் 31.03.2023 வரையான காலப்பகுதியில் வெளியான காணொளிப்பாடல்களை அனுப்ப முடியும்.

வெப்தொடர்கள்
01.01.2022 முதல் 31.03.2023 வரையான காலப்பகுதியில் வெளியான வெப் தொடர்களை அனுப்ப முடியும்.
தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு என தயாரிக்கப்பட்ட குறு நாடகங்களையும் (அதிபட்சம் 10 எபிசோட்கள்) அனுப்பி வைக்க முடியும்.

ஆவணப்படங்கள்
01.01.2022 முதல் 31.03.2023 வரையான காலப்பகுதியில் வெளியான ஆவணப்படங்களை அனுப்ப முடியும்.
தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு என தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களையும் அனுப்பி வைக்க முடியும்.

குவியம் விருதுகள் 2023 விண்ணப்பப்படிவம் (Google form) நிரப்பும் போது கவனிக்க வேண்டியவை:

  • உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை Log in (*Required) செய்ய மறக்க வேண்டாம்.
  • கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலை இட்டு அனுப்பினால் போதுமானது.
  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பும் போது தனித்தனியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் திகதி 30.06.2023

விருது விழா பற்றிய அறிவிப்பு மற்றும் ஏனைய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள தொடர்ந்தும் குவியம் பேஸ்புக் பக்கம் மற்றும் இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.

மேலதிக விபரங்களுக்கு :
தொலைபேசி எண் 0771777434
மின்னஞ்சல் kuviyam.lk@gmail.com

குவியம் விருதுகள் 2023 நிகழ்வுக்கு அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ள விரும்புபவர்களும் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.