நம்பிக்கையைத் தரும் “குற்றத்தடம்” ட்ரெயிலர்

799

𝗦𝘁𝗼𝗿𝘆 𝗗𝗿𝗶𝘇𝘇𝗹𝗲 Pictures சார்பில் T.ஜெனிஸ் இன் தயாரிப்பு, எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குற்றத்தடம்”. இதன் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இதயராஜ், வாகீசன் ஆனந்த், வட்சு, சுவிஸ் ரகு, சங்கீர்தனா, விஷ்ணு, ராஜா மகேந்திரசிங்கம், வைஷ்ணவி, துஷிகரன், மொறிஸ், பாஸ்கரன், மல்கின், ரிஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குற்றத்தடம் படத்திற்கான ஒளிப்பதிவை ராஜ் மூவீஸ் மேற்கொண்டுள்ளதுடன், ஜெயந்தன் விக்கி இசையமைத்துள்ளார். பாடலுக்கான இசையை ரிவின் பிரசாத்தும், ஒலியமைப்பை திஷோன் விஜயமோகனும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கலை இயக்கம் மற்றும் ஒப்பனை பணிகளை வினோஜனுடன் இணைந்து ஜெனிஸ் கவனித்துள்ளார். Title Design & VFX பணிகளை துஷிகரனும், Publicity Design ஐ ஜதுவும், Sound Mic & Dubbing பணிகளை வாகீசன் ஆனந்தும் கவனித்துள்ளனர். நடிக, நடிகையர்கள் தொடர்பு நிவேதிகன் மற்றும் ராஜ்.

ட்ரெயிலரை பார்க்கும் போதே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எம் சமூகத்தின் பிரச்சினை ஒன்றை பேசக்கூடிய சஸ்பென்ஸ், த்ரில்லர் படமாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..