திஷானின் மிரட்டலான நடிப்பில் ‘TN04’ குறும்படம்

890

‘TN04’ அதாவது ‘Take number 04’ என்ற குறும்படம் அண்மையில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

KATHIR – The Independent Artist இன் தயாரிப்பில் சனோஜனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் திஷான் ஆனந்த் பிரதான பாத்திரமேற்று நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை கதிர் செய்துள்ளதுடன், அன்ரன் ரொஷான் இசையமைத்துள்ளார். பிரணவன் SFX பணிகளை கவனித்துள்ளார்.

நிலவழகன் ராம் மற்றும் ராம் தமிழ் ஆகியோர் உதவி இயக்குனர்களாகவும், எஸ்.எஸ்.கெமல் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளதுடன், தனு மற்றும் கிரியன் ஆகியோர் கலை இயக்கத்தினை கவனித்துள்ளனர்.

மிரட்டல் இசையுடன் ஆரம்பிக்கும் இந்தக்குறும்படத்தில் இரு வேறு காட்சிகள் ஊடாக கதை சொல்லப்படுகிறது. ஒரு புறம் போதைக்கு அடிமையாகியிருக்கும் இளைஞன், மறுபுறம் அதே இளைஞன் சினிமாவில் நடிக்கின்றார்.

இந்த இரண்டு புள்ளிகளுக்கும் அழகான முடிச்சை போட்டு குறும்படத்தை நிறைவு செய்கின்றார்கள்.

படத்தில் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என தொழில்நுட்பப்பகுதிகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. திஷானின் நடிப்பும் மிரட்டல்.

கூடவே இந்தக்குழுவினர் தயாரித்த மற்றுமொரு குறும்படமான Blink இன் ரிலீஸ் திகதியையும் அறிவித்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு..

Producer – KATHIR – The Independent Artist
Director – Sanojan
DOP & Editor – KATHIR
Music & Mix – Anton Rawshan
SFX – Piranavan Buvanendran
Assistant Directors – Nizhvalakan Raam & Raam Thamizh
Camera Assistant – SS Kemal
Art Team – Thanu & Kiriyan
Casting –
Thishan
RK Stark
Newton Devi
Production Team – Sibojan & Vajivaran