பசுமையாக மீளுருப்பெற்றிருக்கிறது “கிளிவெட்டி” பாடல்

216

கடந்த ஆண்டு வெளியானது தமோ பிரமேந்திரனின் தயாரிப்பு மற்றும் வரிகளில் உருவான “கிளிவெட்டி” பாடல்.

இந்தப்பாடலுக்கான இசையை விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் சாய்சரண் அமைத்துள்ளதுடன், மற்றுமொரு சூப்பர் சிங்கர் பிரபலம் ஹரிபிரியாவுடன் இணைந்து அவரே பாடியிருந்தார்.

இப்பாடலின் காணொளி ஆக்கம் இலங்கை, இந்திய கூட்டுத்தயாரிப்பாக முன்னர் வெளிவந்த நிலையில், தற்சமயம் முற்றுமுழுதாக இலங்கையில் படம்பிடிக்கப்பட்ட பாடல் “கிளிவெட்டி பசுமையிலே” என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது.

கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் கிளிவெட்டி. அதன் அழகை வெளிப்படுத்தும் விதமாக ஒரு காதல் காட்சி அமைத்து பாடலை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

காணொளிப்பாடலை எஸ்.என்.விஷ்ணுஜன் இயக்கியுள்ளார். பாடலில் ஆதி திரு மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் அழகாக நடித்துள்ளனர். அச்சுதன் அழகுதுரை ஒளிப்பதிவு செய்திருப்பதுடன் விஜி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார்.

நடன இயக்குனராக முந்தன் ஜீ உம், உதவி நடன இயக்குனராக எஸ்.திவ்யாவும் பணியாற்றியிருப்பதுடன், Agarathi Dance Academy ஐ சேர்ந்த நடனக்கலைஞர்கள் பாடலில் தோன்றியுள்ளனர்.

Cast | AATHI DIRU | AISHWARYA S VARMAN

Director – S N Vishnujan
Camera – Achuthan Alaguthurai
Edit and Color – VIJI VKR

Produced by – Thamo prductions
Production Manager – Arjun Shanmugalingam

Field Help – Vijikumar Selarednam
Art – TJ ENTERTAINMENT

Choreography -MUGUNDAN JEE
Assistant Choreography – S.THIVYA