“ஊழி” திரைப்படக்குழுவின் ஊடக சந்திப்பு (Video)

633

“சினம் கொள்” என்கிற திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித் ஜோசப் (கனடா) இன் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது திரைப்படம் “ஊழி”. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் தாயகத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 10 திகதி முதல் உலகெங்கும் “ஊழி” திரைப்படம் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழுவினரின் ஊடக சந்திப்பு இன்று (20) மதியம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதில் ஊழி படத்தின் எழுத்தாளர், பாடலாசிரியர் தீபச்செல்வன், நடிகர் கே.சுகாஷ், தயாரிப்பு நிர்வாகி மற்றும் நடிகர் சத்தியானந்தன், நடிகர் ஆகாஷ், உதவி இயக்குனர் ஆர்.ஜே.பெனாஜா மற்றும் உதவி தயாரிப்பு நிர்வாகி வஜிவரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இலங்கை, இந்தியக்கலைஞர்களின் கூட்டுப்பங்களிப்பில் தயாராகியுள்ள இந்தப்படம் தொழில்நுட்ப ரீதியில் இன்னொரு தளத்திற்கு ஈழ சினிமாவை எடுத்துச்செல்லும் என படக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாம் நன்கு அறிந்த அரசியல் தலைவர், சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் இந்தத்திரைப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

ஊடக சந்திப்பை எமது புதிய யு-ரியூப் சனலான குவியம் செய்திகளில் முழுமையாக பார்வையிடலாம். https://www.youtube.com/@KuviyamNews