பிரஷாந்த் புவனேஸ்வரனின் “Palsy“ குறும்படம் வெளியாகியது

294

ஐங்கரன் கதிர்காமநாதன் தயாரிப்பில் பிரஷாந்த் புவனேஸ்வரனின் எழுத்து – இயக்கத்தில் வெளியாகியுள்ள குறும்படம் “Palsy“.

இதன் ஒளிப்பதிவாளராக சோபனாசிவனும், படத்தொகுப்பாளராக திலீப் லோகநாதனும் ஒலி வடிவமைப்பாளராக பிரசன்னாவும் பணியாற்றியுள்ளனர்.

மேலும் காந்தரூபன் பிரதான பாத்திரமாக நடித்துள்ளார். அவருடன் ரெக்சன் மற்றும் துஸிகரன் ஆகியோரும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர்.

ராம் இரவு நேரப் பணிக்காக தனது அலுவலகத்திலிருக்கிறான். அந்த சூழல் அமைதியற்றதாக இருக்கிறது. வழமைக்கு மாறாகவும் முரணாகவும் இருக்கிறது. நடு இரவு தன்னிலை இழந்து தூக்கத்துக்குப் போகின்றான். சில கணங்களில் உடலசைவற்ற விழிப்பு நிலைக்குக் தள்ளப்படுகின்றான். கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுகள் அவனை சுற்றி நடக்க ஆரம்பிக்கிறது. அம் முடக்கத்திலிருந்து மீண்டெழுவதற்குத் அவன் தன் மனதுடன் போராடத் தொடங்குகின்றான். – இவ்வாறாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இக்குறும்படம் 4th Screen Film Awards 2022 இற்காக உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், Student World Impact Film Festival 2023 இன் அரையிறுதிப் போட்டிக்கும் தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Lead Cast : R.KANTHARUBAN,
Supporting Cast : P. NIEL REXON, S.R. THUSIKARAN
Cinematography : SOBANASIVAN.V
Production Designer : PUVANESWARAN PIRASHANTH
Editor : DHILIP LOGANATHAN
Sound Designer : PIRANNA
Publicity Design : S.MORIS
Executive Producer : S.R. THUSIKARAN
Producer : AINHARAN KATHIRGAMANATHAN
Writer & Director PUVANESWARAN PIRASHANTH