இணையத்தில் பெரு வரவேற்பைப் பெற்று வரும் P.s.சுதாகரனின் “ஒருத்தி 2“

356

கனேடிய ஐரோப்பிய தமிழக தமிழீழ கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகி கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் திரையிட்டு பார்வையாளர்களின் அபிமானத்தை பெற்ற “ஒருத்தி-2” திரைப்படம் தற்சமயம் இணையத்தில் வெளியாகி பெரு வரவேற்பைப் பெற்று வருகிறது.

P S Cine Arts தயாரிப்பாக இதனை எழுதி இயக்கியுள்ளார் P.s.சுதாகரன். அனுஷா சுதாகரன் தயாரித்துள்ளார்.

ஜீவன்ராம் ஜெயம் மற்றும் தீபன் ராஜலிங்கம் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவினை மேற்கொண்டுள்ளனர். ஈஸ்வரமூர்த்தி படத்தொகுப்பாளராகவும் பிரவின்குமார் பின்னணி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

பாடல்களுக்கான இசையினை ஸ்ரீவிஜய் மற்றும் பாபு ஜெயகாந்தன் ஆகியோர் அமைத்துள்ளனர். வருண் துஷ்யந்தன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

கலைவாணி, ஜெயபிரகாஷ், டனீஷ் ராஜ், அருண், சிறிமுருகன், சாந்தா சோமாஸ்கந்தா, ரவி பரமநாதன், செல்வஜோதி, தயாநிதி, குணபாலன், சுரேஷ்ராஜா, திவியராஜன், கமிலா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

கனடாவில் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக “ஒருத்தி-2” உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.