“மூக்குத்திப்பூ“ படத்தின் புதிய ட்ரெயிலர் வெளியாகியது

71

பூவரசி மீடியா தயாரிப்பில் ஈழவாணியின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மூக்குத்திப்பூ”. இது எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் யாழ். ராஜா திரையரங்கிலும் ஜூன் 15 ஆம் திகதி மன்னார் சண் திரையரங்கிலும் ஜூன் 16 ஆம் திகதி வவுனியா அமுதா திரையரங்கிலும் வெளியாகவுள்ளதுடன் தொடர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் சபேசன், ரூபன் சிவா, தீப்திகா, விதுர்ஷன், திருமலை பிரணா, கிருஷாணிகா, தனுஜா, ருவி, சிந்து, ஆர்.கே.ஸ்டார்க், ருசிந்தன், இளங்கோ, பவி, வாணி மற்றும் பலர் நடித்துள்ளதுடன், ஒளிப்பதிவை “இலங்கேயன் பிக்சர்ஸ்” ரெஜி செல்வராசா மேற்கொண்டுள்ளார்.

இசை பத்மயன் சிவா, படத்தொகுப்பு அலெக்ஸ் கோபி, ஒப்பனை அன்ட்ரூ ஜூலியஸ், கலை இயக்கம் வி.எஸ்.சிந்து, தயாரிப்பு முகாமை ஆர்.கே.ஸ்டார்க், தயாரிப்பு நிர்வாகம் மரீனா ஜெசி.

பட வெளியீட்டையொட்டி இயக்குனர் ஈழவாணி தனது பேஸ்புக் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.

மூக்குத்திப்பூ திரைப்படம் ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய கலைஞர்களுக்கான, உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கான வரவேற்பை நீங்கள் தான் வழங்கவேண்டும். எங்களுக்கு மத்தியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கதைகளையே திரைப்படமாக்கியிருக்கிறோம், நீங்கள் எங்கேயோ, அல்லது பக்கத்துவீட்டில், உறவினர்களுக்கிடையில், என்டு நீங்கள் கேள்விப்பட்ட எங்கட கதைகளைத்தான் திரைப் படமாக்கியிருக்கிறம்.

உங்களுக்கு நிச்சயமா இது பிடித்தமான உணர்வைக் கொடுக்குமென்று நம்புகின்றோம்.

திரையில் பார்த்து நீங்க சொல்லுங்க.

உங்கள் கலைஞர்களின் வளர்ச்சியையும் திறனையும் ஆதரியுங்கள், கருத்துக்களை சொல்லுங்க. அதுதான் எங்கள் அடுத்த படைப்புக்கான முதலீடு.