குவியம் விருதுகள் 2024 – அறிவிப்பு (Application – Google form)

53

(திரைப்படங்கள், குறும்படங்கள், காணொளிப்பாடல்கள்)

இலங்கைத் தமிழ் சினிமா கலைஞர்களின் படைப்புக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ‘குவியம்’ இணையத்தளமானது எம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடாத்தி வரும் விருதுகள் வழங்கும் நிகழ்வு இம்முறை 3 ஆவது வருடத்தை எட்டியுள்ளது.

3ஆவது வருடத்திலும் இதனைத் தொடர எங்களுக்கு ஆதரவும் உத்வேகமும் அளித்துக் கொண்டிருக்கும் சினிமா கலைஞர்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

மூன்றாவது வருடம் என்பதால் இன்னும் பல ஆச்சரியங்களை உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கின்றோம்.

அதற்கமைய ‘குவியம் விருதுகள் 2024’ இற்கான அறிவிப்புக்களை தற்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகின்றோம்.

பொதுவான நிபந்தனைகள் :

 • ஒரு படைப்பின் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப முடியும். (வேறு நபர்கள் அனுப்பும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு இடமின்றி நிராகரிக்கப்படும்)
 • குறித்த தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களுக்கான விண்ணப்பங்களையும் அனுப்ப முடியும்.
 • படைப்புக்கள் அனைத்தும் 01.04.2023 முதல் 30.04.2024 வரையான காலப்பகுதியில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும். (முடிவுத்திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
 • இணையத்தில் வெளியான படைப்புக்களுக்கு அதன் இணைப்பை (link) அனுப்பினால் போதுமானது. ஏனையவர்கள் Google drive அல்லது வேறு முறையை பயன்படுத்தி எமது மின்னஞ்சலுக்கு படைப்புக்களை அனுப்பலாம்.
 • இலங்கையில் இருந்து அனுப்பப்படும் படைப்புக்களுக்கான விண்ணப்பக்கட்டணம் 1000 ரூபாய்.
  விண்ணப்பக்கட்டணத்தை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பின் அதன் சிட்டையை (Receipt or Online transfer PDF/JPG) 0775951134 என்ற இலக்கத்திற்கு வட்ஸ் அப் பண்ணவும்.

Betta holdings (pvt) Ltd
Account Number – 117010012494 
Bank – Hatton National Bank
Branch – Chunnakam, Jaffna.

 • திரைப்படங்கள் – 60 நிமிடங்களுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
  குறும்படங்கள் – 25 நிமிடங்களுக்கு மேற்படலாகாது.
  நடுத்தர நீள திரைப்படங்கள் – 25 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

குவியம் விருதுகள் 2024 விண்ணப்பப்படிவம் (Google form) நிரப்பும் போது கவனிக்க வேண்டியவை:

 • உங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை Log in (*Required) செய்ய மறக்க வேண்டாம்.
 • கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலை இட்டு அனுப்பினால் போதுமானது.
 • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புக்களை அனுப்பும் போது தனித்தனியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவத்தை குவியம் பேஸ்புக் மற்றும் இணையத்தள பக்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய புதிய இறுதித் திகதி 15.06.2024

விருது விழா பற்றிய அறிவிப்பு மற்றும் ஏனைய அறிவிப்புக்களை அறிந்து கொள்ள தொடர்ந்தும் குவியம் பேஸ்புக் பக்கம் மற்றும் இணையத்தளத்துடன் இணைந்திருங்கள்.

மேலதிக விபரங்களுக்கு :
தொலைபேசி எண் 0775951134, 0755051987, 0212222982
மின்னஞ்சல் kuviyam.lk@gmail.com

குவியம் விருதுகள் 2024 நிகழ்வுக்கு அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ள விரும்புபவர்களும் எம்மைத் தொடர்பு கொள்ளவும்.