மீண்டு(ம்) வந்த தர்சனன் அருட்செல்வன்

809

இசையமைப்பாளர் தர்சனன் அருட்செல்வனை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. தனது 17 ஆவது வயதில் பாடசாலைக் காலத்தில் தனது முதல் இசை அல்பமான “17 வயதினிலே” ஐ வெளியிட்டார்.

அதன் பின்பும் தொடர்ச்சியாக பல்வேறு பாடல்களை வெளியிட்டதுடன், மதிசுதாவின் “தழும்பு”, வரோதயனின் “இலவு”, தனது இயக்கத்தில் உருவான “அஞ்சல”, “கரம்” ஆகிய குறும்படங்களுக்கு இசையமைத்ததுடன், இவரின் இசை மற்றும் இயக்கத்தில் உருவான “X Selfie” காணொளிப்பாடல் இணையத்தில் பலராலும் பேசப்பட்டது.

அண்மைக்காலமாக இவரது பாடல்கள் எவையும் வெளிவராத நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் முத்தான சில பாடல்களை எடுத்து ஒலிக்கலவை (Mashup) செய்திருக்கின்றார்.

Vocal – Tharshanan Arutselvan
Programmed/Arranged/Mix and Master: V.Senthuran
Cinematography: Praveen
Promotion Designer – Yasir Nizardeen
Executive Producers : R.Thuwakaran,N.Janusan,A.Rasanthan,R.M.Akmal
Co Producer – K.Nandhaghoban