‘ஒரு குயிலும் இரண்டு கோட்டானுகளும்’ படம் இணையத்தில் வெளியாகிறது

777

“சந்திரா புரொடக்சன்ஸ் அவுஸ்ரேலியா” தயாரிப்பில் என்.எஸ்.தனா இயக்கத்தில் ஆர்.டினேஸ், ஷணா, முள்ளியவளை சுதர்சன், மிருனாளினி, என் கருணாகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளிவந்த “ஒரு குயிலும் இரண்டு கோட்டானுகளும்” திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியாகவுள்ளது.

இது குறித்த அறிவிப்பை நடிகர் சுதர்சன் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஆஸ்திரேலிய திரையரங்குகளில் வெளியான “ஒரு குயிலும் இரண்டு கோட்டானுகளும்” முழுநீள திரைப்படத்தை எதிர்வரும் 05.06.2020 அன்று இணையதளத்தில் இயக்குனர் N.S Thanaa அவர்கள் வெளியிட உள்ளார்.

என்னை, என் பயணங்கள் நோக்கிய பாதைகளில் ஆர்வமும் ஆதரவும் கொண்டவர்களுக்கு, என் நடிப்பிற்காக எனக்கு மகிழ்ச்சியான கருத்துக்கள் கிடைத்தது, இத்திரைப்படத்தில் என்னை இணைத்துக்கொண்ட இயக்குனர் அவர்களுக்கு
நன்றிகளுடன் ❣️ இத்திரைப்படத்தை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுவதுடன், உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகின்றேன்” என்றுள்ளது.

Director – NS Thanaa
Music – Varshan
Producer – NS Thanaa, Chandra
Make up – Juli velankanni
Editor – John Dominic
DOP – Sydney Prasath