‘ஈகம் வெல்லும்’ – மண்ணின் வலி சுமந்த பாடல்

301

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை (மே 18) முன்னிட்டு இவ்வருடம் பத்மயன் சிவாவின் இசையில் வெளிவந்த பாடல் “ஈகம் வெல்லும்”.

எம் மண் சுமந்த வலிகளை தன் வரிகளாக்கியுள்ளார் பாடலாசிரியர் குவேந்திரன். சோகம் இழையோட துஷ்யந்தனின் குரலில் பாடல் மேலும் அழகாகியுள்ளது. ஓவியர் புகழேந்தியின் “போர் முகங்கள்” ஓவியத் தொகுப்பில் இருந்து பெறப்பட்ட ஓவியங்களைக் கொண்டு வரிப்பாடலை வண்ணமயமாக்கியிருக்கின்றார் படத்தொகுப்பாளர் கேமல்.

இசை :பத்மயன் சிவானந்தன்
பாடல் வரிகள் : குவேந்திரன் கணேசலிங்கம்
பாடியவர் : துஷ்யந்தன் கேதீஸ்வரன்
ஓவியம் : ஓவியர் புகழேந்தி
படக்கலவை: கேமல்