மிஷ்கின் – சிம்பு படத்தில் இணையும் மற்றுமொரு பிரபலம்!

200

இயக்குனர் மிஷ்கின், நடிகர் சிம்பு இருவருமே சர்ச்சைகளுக்கு பேர் போனவர்கள். இவர்கள் இருவரும் புதிய படத்தில் இணைந்துள்ளார்களாம்.

சிம்பு பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், கொரோனா வந்து சகலவற்றையும் குழப்பியதால் படப்பிடிப்புக்கள் தற்போது தடைப்பட்டுள்ளன.

அதேபோல, மிஷ்கினும் விஷால் நடிப்பில் “துப்பறிவாளன் 2” ஐ இயக்கிக் கொண்டிருந்தார். அதன்போது, இருவருக்கும் கருத்து வேறுபாடு எழவே படத்தில் இருந்து விலகிக் கொண்டார் மிஷ்கின். இப்போது, இவர்கள் இருவரும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணியாற்றப்போகின்றார்கள் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சிம்பு பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் “வைகைப்புயல்” வடிவேலுவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல். எனவே, “கோவில்” படத்தில் கலக்கியதைப் போல் சிம்பு – வடிவேல் கூட்டணி இப்படத்திலும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.