ஜோதிகா ஏன் வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் இப்போது நடிப்பதில்லை?

436

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக மிளிர்ந்து கொண்டிருந்த சூர்யா – ஜோதிகா திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர், நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார் ஜோ.

பின்னர் மீண்டும் நடிப்புக்குத் திரும்பியதுடன், ஹீரோயினை மையப்படுத்திய படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார். அதிலும் குறிப்பாக தனது கணவரின் “2டி எண்டர்டெய்மண்ட்” சார்பிலேயே அதிக படங்களில் நடித்துள்ளார்.

பாலாவின் “நாச்சியார்”, மணி ரத்னமின் “செக்கச் செவந்த வானம்” போன்ற சில படங்களில் மட்டுமே வெளித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் அவர் நடித்த “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் அமேசன் ப்ரேமில் வெளியாகியுள்ளது. இதுவும் சூர்யாவின் தயாரிப்புத் தான்.

இந்நிலையில், தொடர்ந்தும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் மட்டும் ஏன் நடிக்கிறீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், “இது எனக்கு வசதியாக இருக்கிறது. குடும்பம், குழந்தைகளையும் கவனிக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்புகளில் எனக்கு சில தளர்வுகள் வேண்டும். அதற்கு சொந்த தயாரிப்பு தானே வசதி?” என்று பதில் அளித்துள்ளார்.