‘பாரதபூமி’ – இசைஞானியின் வித்தியாசமான அர்ப்பணம்

691

கொரோனா வைரஸின் (கொவிட்-19) தாக்கம் உலகளாவிய ரீதியில் பாரிய மனிதப்பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இதன் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன், 2 மாத கால முடக்கத்திற்கு பின்னர் இப்போது தான் நாடுகள் சகஜ நிலைக்குத் திரும்பி வருகின்றன.

இந்தக் கொரோனா காலத்தில் மிக உன்னதமான பணிகளைப் புரிந்தவர்கள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களே! அதேபோல், நாட்டில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் பாதுகாப்பு தரப்பினரும் அர்ப்பணிப்போடு செயற்பட்டுள்ளனர். எனவே, இவ்வாறு முன்களப்பணிகளில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் வகையில் இசைஞானி இளையராஜா “பாரதபூமி” என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

இப்பாடலை ஹிந்தியிலும் வெளியிட்டுள்ளார் இசைஞானி. இப்பாடலுக்கு பலரும் தமது ஆதவையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து இந்திய துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு தனது ருவிட்டர் பக்கத்தில், “இதுவரையில் கண்டிராத வகையிலான கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக முன் கள வீரர்களாக நின்று போராடுபவர்களுக்கும் ஒன்றின்றிணைந்து நிற்கும் இந்திய மக்களுக்கும் இந்திய திருநாட்டிற்கும் இசையால் பெருமை சேர்த்த பாரத பூமி என்ற தொகுப்பை கண்டு மகிழ்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.