இசையமைப்பாளர் மதீசனுக்கு முதல் சர்வதேச விருது!

384

ட்ரைடன் பாலசிங்கம் இயக்கத்தில் உருவான ‘TOASTER’ என்ற குறும்படத்திற்கு ‘SOUTH FILM AND ARTS ACADEMY FESTIVAL, CHILE 2020’ திரைப்பட விழாவில் மூன்று விருதுகளும் இரண்டு கௌரவங்களும் கிடைத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இவ்விழாவில் சிறந்த சமூகத்திரைப்படத்திற்கான விருதையும் சிறந்த இளம் இயக்குனருக்கான விருதையும் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் இப்படம் பெற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் விருது பெற்ற இயக்குனர் ட்ரைடன் பாலசிங்கம், மற்றும் இசையமைப்பாளர் மதீசன் ஆகியோருக்கு எமது வாழ்த்துக்கள்.

இதனைவிட குறித்த குறும்படத்திற்கு திரைக்கதை மற்றும் விஷூவல் எபெக்ட்ஸூக்காகவும் கௌரவங்கள் கிடைத்துள்ளன. “ஒரு இசையமைப்பாளராக தனக்கு கிடைக்கும் முதல் சர்வதேச விருது இது” என மதீசன் தனது மகிழ்ச்சியை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.