விக்ரமுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

327

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இன் இயக்கத்தில் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை ‘செவன் ஸ்கிறீன் ஸ்ரூடியோஸ்’ சார்பில் லலித் குமார் தயாரிக்கவுள்ளார்.

மகனின் ‘ஆதித்யா வர்மா’ படத்திற்காக நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்ட விக்ரம் தற்சமயம் அஜய் ‘ஞானமுத்து’ இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்திற்கான இசை ஏ.ஆர்.ரஹ்மான். கொரோனா சூழலில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் கொரோனாவுக்கு முன் தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்தை தொழிலாளர் தினத்திற்கு வெளியிடவும் திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால், ஊரடங்கு காரணமாக அப்படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. ‘ஜெகமே தந்திரம்’ பூரணப்படுத்தப்பட்டு விட்டதால் தனது அடுத்த படம் குறித்து கவனம் செலுத்துகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

இந்நிலையில், முடக்க காலத்தில் விக்ரமுக்கு கதை சொல்ல அது ‘ஓகே’ ஆனதாக கூறப்படுகின்றது. விரைவில் படம் குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளிவரும்.