ரசல் ஆர்னோல்டின் பாராட்டைப் பெற்ற ‘தூரம் போகாதே’ பாடல்

435

இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராமின் இசையில் கவின், ஜீவானந்தன் ராமில் குரல்களில் கடந்த வாரம் வெளிவந்த பாடல் ‘தூரம் போகாதே’.

பாடல் வெளியான நாள் முதல் பலராலும் பகிரப்பட்டு பாராட்டுப் பெற்றுவரும் இந்தப் பாடலை இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது பாடல் குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இது குறித்த சந்தோசத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஜீவானந்தன் ராம், ‘பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இவ்வாறான உண்மையான ரசிகர்களின் ரசனை தான் ஒரு கலைஞனுக்கு முக்கியம்’ எனப்பதிவிட்டுள்ளார்.

இந்தப் பாடலுக்கான வரிகளை அமல்ராஜ் எழுதியுள்ளதுடன், ஒலிக்கலவை செய்திருக்கின்றார் மிருண் பிரதாப். கவின், பிரணா தோன்றிருக்கும் இப்பாடலை ருக்ஷான் டேவிட் இயக்கியுள்ளார்.