லொஸ்லியாவின் ‘ப்ரெண்ட்ஷிப்’ first look வெளியானது

1113

இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா மரியநேசன், தென்னிந்தியத் தொலைக்காட்சியான விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான “பிக் பொஸ் 3” இல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு தென்னிந்திய திரையுலகில் நடிப்பதற்கு பல்வேறு வாய்ப்புக்கள் வந்த நிலையில், “ப்ரெண்ட்ஷிப்” என்ற படத்தில் ஒப்பந்தமானார். குறித்த படத்தின் மூலம் இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுழல்பந்து வீரர் ஹர்பஜன் சிங்கும் நடிகராக அறிமுகமாகின்றார். இப்படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கிய வேடமேற்றிருக்கின்றார்.

இந்நிலையில், இப்படத்தின் “First look Motion” போட்டரினை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியிடப்பட்டுள்ள “ஃபொஸ்ட் லுக்” ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.